Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எதிர்வரும் 7ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு பூட்டு


 நாட்டில் நிலவும் கொவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்களன்று பாடசாலைகளை மீளத்திறக்க திட்டமிட்டிருந்த போதிலும் மாணவர்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மே 10ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறப்பதா, இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.