Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நாட்டில் மிக அதிகளவாக 1,661 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நாட்டில் மிக அதிகளவாக 1,661 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவா்களுடன் நாட்டில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளது.
புதிய தொற்று நோயாளர்களுடன் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 108,146 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவா்களில் 95,975 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
புதிய தொற்று நோயாளர்கள் நாட்டில் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் நாடு முழுவதும் இன்றுவரை 11,504 பேர் தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொரோனா மரணங்களும் அதிகரித்து வருகின்றமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.