Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா

 

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் குடும்பத்தை சேர்ந்த பத்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதை அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா நோய் மிகவும் தனிமையில் இருக்கக்கூடிய ஒன்றாகும். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் இருந்து பாதியில் விலகினார். கொரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.