Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வாகன டயர் தேய்திருந்தால் 3500 ரூபாய் அபராதம்

 


பசறையில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர விபத்தினையடுத்து வாகனங்களில் டயர்களின் தரத்தை ஆய்வு செய்ய பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேய்ந்துபோன டயர்களுடன் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு 3,500 ரூபாவும் தரமற்ற வாகனங்களை செலுத்துபவர்களுக்கு 25,000 ரூபா வரையும் அபராதமாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வாகனங்களை அடையாளம் காண இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இதேவேளை வீதி விபத்துக்கள் காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் எட்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.