Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா!


கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்கு உட்பட்ட நடுஊற்று கிராம சேவகர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர் என குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம் அஜித் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிண்ணியா நடுஊற்று கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒரு குடும்பஸ்தர், வெளிநாடு செல்லுவதற்காக கொழும்பில் PCR மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக எமக்கு அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது முதன் நிலை தொடர்பாளர்களை அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, மேலும் 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்தக் குடும்பத்திலிருந்து, மகாமாறு பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார். இதுவேளை, இந்தப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.