Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

திருகோணமலை நகரில் 19 பொசிட்டிவ் உறுதி



திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உற்பட்ட காந்திநகர் பிரதேசத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட 156 அன்டிஜன் பரிசோதனைகளில் 16 பொசிட்டிவ் முடிவுகள் வந்துள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.


நேற்று காந்திநகர் பிரதேசத்தில் கொவிட்19 தொற்று உறுதியான 20 வயதான நபர் மரண வீட்டிற்கு சென்று வந்ததன் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் நான்கு நபர்களுக்கும் மொத்தமாக அப்பிரதேசத்தில் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களை தனிமைப்படுத்தலுக்கும் உற்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு உற்பட்ட பூம்புகார் பிரதேசத்தில் மூன்று கொவிட்19 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டதாக உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கொவிட்19 தொற்று உறுதியானதை அடுத்து தொற்றாளர்களை பொருத்தமான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் ஈடுபடுகின்றது.

FB
ஏ எம் கீத்
திருகோணமலை.