புலனாய்வு அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைவாகவே மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் 600ற்கும் அதிகமான ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றி கடந்த 12 மாதங்களாக புலனாய்வுத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மேற்பார்வை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக திணைக்களத்தின் ஊழியர்கள் எதிர்ப்புக்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் இந்தத் தீர்மானத்தை மாற்ற முடியாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.