Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வெளிநாட்டு வேலை என்றதும் உடனே அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, சிங்கப்பூர் என நினைக்கவேண்டாம்.


வெளிநாட்டு வேலை என்றதும் உடனே அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, சிங்கப்பூர் என நினைக்கவேண்டாம்.
இந்த நாடுகள் இப்ப ஹவுஸ்புல்...விசா, வேலைவாய்ப்புகள் எல்லாமே இந்தியர்களுக்கு கடினம் ஆகி வருகிறது.
அடுத்த நிலையில் இந்தியர்கள் அதிகமாக இல்லாத ஆனால் நல்ல குடியேற்ற வாய்ப்பை வழங்கும் நாடுகள் என பார்த்தால் ருவாண்டா, தென்னமெரிக்க நாடுகள், மத்திய ஆசிய நாடுகள் (Central asian nations) உள்ளன.
ருவாண்டா என்றதும் 90களின் இனப்படுகொலை நினைவு வந்து பதறவேண்டாம். இப்போது ஆப்பிரிக்காவிலேயே வளம் பொருந்திய நாடு, அடுத்த சிங்கபூர் என அழைக்கபடும் நாடு ருவாண்டாதான்.
இங்கே எல்லாம் வேலைவாய்ப்புகள் குறைவு, சம்பளமும் பெரியதாக இல்லை. ஆனால் வணிகம் செய்ய நல்ல வாய்ப்புகள் உள்ளன.
உதாரணமாக பஞ்சாபி விவசாயிகள் ஜார்ஜியா நாட்டில் அதிக அளவில் குடியேறி மிக மலிவான விலையில் நிலங்களை வாங்கிபோட்டு பஞ்சாபிகளை வைத்து விவசாயம் செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.
அதேபோல தென்னமெரிக்க கண்டத்தில் பல நாடுகளில் இந்தியர்கள் மிக குறைவு. ஆனால் இவற்றில் உள்ள பெருநகரங்களில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இங்கே எல்லாம் க்ரீன் கார்டுக்கு ஒப்பான ஒர்க் விசா கிடைப்பது மிக எளிய விசயம். அர்ஜென்டினாவில் இரண்டு வருடம் வசித்தால் குடியுரிமையே வாங்கிவிடலாம். கரிபியன் நாடுகள் பலவற்றில் இந்தியர்களுக்கு விசா இல்லாமல் ஆறு மாதம் தங்க அனுமதி அளிக்கிறார்கள்.
ஆக இங்கே எல்லாம் இந்திய உணவகங்களை துவக்கினால் நல்ல வியாபாரம் செய்யலாம். உலகில் சீன உணவுக்கு அடுத்து புகழ்பெற்ற உணவு இந்திய உணவு. பனமா சிட்டி மாதிரி பெருநகரங்களில் நல்ல் இந்திய உணவகத்தை துவக்கினால் நல்லா வியாபாரம் ஆகும்.
ஆனால் எடுத்த எடுப்பில் ஏழெட்டு லட்சத்தை கொண்டுபோய் இறக்கி வணிகம் செய்யவேண்டாம். முதலில் அங்கே போய் கொஞ்ச நாள் இருந்து, கிடைக்கும் வேலையை செய்து, ஊரை தெரிந்துகொண்டு சின்னதாக ஒரு டிரக்கில் தோசை, நான் என வைத்து விற்று அதன்பின் பெரிதுபடுத்தி வணிகம் செய்யலாம்.
இதெல்லாம் முடியுமா, நடக்குமா என திகைக்கவேண்டாம்
🙂
குஜராத்தி படேல்கள் பல ஊர்களில் பெட்ரோல் வங்கி, உணவகம் என வைத்து நடத்தி நல்ல லாபம் சம்பாதிக்கிறர்கள். மில்வாக்கி நகரில் பஞ்சாபி ஒருவர் இட்டிலி, மசால் தோசை, கிச்சடி எல்லாம் விற்று வருகிறார்
🙂
இவற்றை எல்லாம் சமைக்க பெரிய எக்ஸ்பெர்ட் ஆக இருக்கவேண்டியது கிடையாது. சும்மா ரவுண்டா மாவை ஊற்றினால் தோசை..யாரும் பெருசா சுவையை எல்லாம் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் யாருக்கும் நிஜமான தோசை, கிச்சடி எல்லாம் எப்படி இருக்கும் என தெரியாது. தமிழ்நாட்டில் விற்கும் பீட்சா எல்லாம் இத்தாலியர்களுக்கு பிடிக்குமா என்ன? ஆனால் தமிழர்களுக்கு பிடிக்கும் அல்லவா? அந்த லாஜிக்தான்
🙂
இந்த நாடுகள் பலவற்றில் வணிகம் செய்வது மிக எளியது, வரிகள் குறைவு, தேவைப்படும் முதல் குறைவு, விசா கிடைப்பது எளிது.
இந்த வாய்ப்புகளை ஆராய்ச்சி செய்யுங்கள். யாருக்காவது பயன்பட்டால் மகிழ்ச்சி