Header Ads

  • Breaking News

    குடும்ப அங்கத்தவர்களால் பெண்கள் கொல்லப்பட்டால் கடும் தண்டனை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (: UAE ) அரசு அறிவிப்பு

     


    குடும்ப அங்கத்தவர்களால் பெண்கள் கொல்லப்பட்டால் கடும் தண்டனை வழங்குவதற்கு ஏற்ற வகையில் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளப் போவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    உறவினர்களுக்கு அகௌரவத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில்; பெண்கள் கொல்லப்படுவதுண்டு.
    உலகெங்கும் வருடாந்தம் ஆயிரக்கணக்கான பெண்கள், குடும்பத்துக்கு அகௌரவத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.

    இந்நிலையில், இனிமேல் இத்தகைய குற்றங்கள் கொலைகளாக கருதப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    இச்சட்டத் திருத்தமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் கலீபா பின் ஸயீட் அல் நெஹ்யானினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல சீர்திருத்தங்களில் ஒன்றாகும் என WMM  செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் கடற்கரையொன்றில் உல்லாசப் பயணிகள் (வைப்பகப்படம்)

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad