Header Ads

  • Breaking News

    அடுத்த மூன்றரை வருடங்களுக்கு கொரோனாவுடன் வாழ பழகவேண்டும்; – சுகாதார அமைச்சர் | Trincoinfo

     


    அடுத்த மூன்றரை வருடகாலத்திற்கு மக்கள் கொரோனா வைரசுடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

    இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் சில காலத்திற்கு வைரஸ் காணப்படும் என்பதால் இலங்கை அதனை எதிர்கொள்வதற்கான தனது அணுகுமுறையை மாற்றும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய அனில் ஜெயசிங்கவையும், சுகாதார அமைச்சின் பேச்சாளராக பணியாற்றிய வைத்தியர் ஜெயருவன் பண்டாரவையும் தான் பதவி நீக்கியதாக தெரிவிக்கப்படுவதை சுகாதார அமைச்சர் நிராகரித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad