Header Ads

  • Breaking News

    நகராட்சிமன்ற எல்லைப்பகுதிக்குள் மீண்டும் கட்டாக்காலி மாடு | Trincoinfo

     

    நகராட்சிமன்ற எல்லைப்பகுதிக்குள் மீண்டும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வீதிவிபத்துக்கள் ஏற்பட்டு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை (20.11.2020) தெருவில் நின்ற மாடுகள் யாவும் பிடிக்கப்பட்டன. இதில் 17 மாடுகள் மலையருவி காணிக்குள்ளும் 21 மாடுகள் லிங்கநகர் நகராட்சிமன்ற காணிக்குள்ளும் 05 மாடுகள் உவர்மலையிலுள்ள ஓர் காணியிலும் மொத்தமாக 43 மாடுகள் அடைக்கப்பட்டன. இம்மாடுகளுக்கு உரிமையாளர்கள் யாரென விபரங்கள் திரட்டப்பட்டு மீண்டும் இவர்களுடைய மாடுகள் பிடிக்கப்பட்டால் பொலிசாரும் நகரசபையும் இணைந்து கால்நடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.
    தலைவர் - நகராட்சிமன்றம் - திருகோணமலை.



    Fb -  நகராட்சி மன்றம் திருகோணமலை

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad