Header Ads

  • Breaking News

    நிராகரிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களின் விண்ணப்பங்கள் மீள் பரிசீலனை | Trincoinfo



    அரசாங்கத்தின் பட்டதாரி பயிலுனர் மற்றும் டிப்ளோமாதாரி பயிற்சி வேலைத்திட்டத்தின் நியமனத்தின்போது நிராகரிக்கப்பட்டு மீண்டும் மேன்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஊழியர் சேமலாப நிதிய அங்கத்துவம் கொண்டிருத்தல், தொழிலில் ஈடுபட்டிருத்தல், களனி பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ் பெற்றிருக்காமை முதலான காரணங்களால் நியமனம் வழங்குவது மறுக்கப்பட்ட பட்டதாரிகள் சமர்ப்பித்த மேன்முறையீட்டு விண்ணப்பங்களின் தகைமையை பரிசீலித்து அவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    முறைப்பாடு செய்யப்பட்ட பின் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தொழில் வழங்குவது தொடர்பாக எதிர்காலத்தில் கொள்கையளவிலான தீர்மானம் எடுக்கப்படுமெனவும் வேறுபாடுகள் பாராது நியமனங்கள் வழங்கப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டு நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad