Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஒரு லட்சம் காணி துண்டுகள் | திட்டவரைபு அல்லது திட்ட அறிக்கை | Trincoinfo

Part - 1
#Project_Proposal என்றால் என்ன ..?
#திட்டவரைபு அல்லது திட்ட அறிக்கை
அது எந்த மொழியில் இருக்க வேண்டும் ..?
✅
இளம் தொழில் முனைவோர் திட்டத்தில் காணி துண்டுகளை பெற நீங்கள் உருவாக்கும் திட்ட அறிக்கை தெளிவான ஆங்கிலத்தில் இருப்பது நல்லது.
உங்கள் ஆவணங்களை ஆய்வு செய்யும் அதிகாரி சிங்களவர் என்றால் தமிழ் மொழி ஆவணங்களை மொழி பெயர்க்க தமிழ் அதிகாரிகள் உதவி தேவைப்படும். பல நேரங்களில் எங்களின் திட்டங்கள் சரியாக இருந்தாலும் மொழி புரிதலின்மை தெரிவு அதிகாரிகளின் அன்றைய மன நிலைக்கு ஏற்றபடி (சலிப்பை உருவாக்கி ) எங்களுக்கான வாய்ப்பை பின் தள்ளி விடும்
வாய்ப்புக்களும் உண்டு. அதனால் ஆங்கிலத்தில் எழுதுவதே சிறப்பு
நீங்கள் தேர்வு செய்த துறை என்ன ..? அதன் முயற்சிகள், உதவிகள், நிதிகள், தேவையான மனித வலு குறித்து தெளிவாக சுருக்கமாக எழுத வேண்டும்.
✍️
நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவோர் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் Project Proposal குறித்த மாதிரி படிவங்களை நாளை பதிவு செய்கின்றேன். யாரும் அவசரப்பட வேண்டாம். உங்களுக்கு போதுமான நேரம் உண்டு. அதற்கு முன் உங்கள் முயற்சிகளுக்கு தேவையான விபரங்களை இப்பதிவில் இருக்கும் விபரங்களையும் அதற்கு மேலும் தெளிவாக அத்துறையில் அனுபவம் கொண்டோரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
எந்த விடயமும் அதை அறிந்து கொள்ளாமல் இருக்கும் வரை தான் குழப்பங்களும்
பதட்டமும் இருக்கும். கொஞ்சம் முயற்சி செய்து அறிந்து கொண்டால் அட ...! இவ்வளவு தானா..? என்று இருக்கும்.
அப்படிதான்
💝😻🚴‍♀️🚴‍♀️
Project Proposal .
✅
திட்டவரைபு என்றால் கம்யூட்டரில் வெறும் கோடு போடும் விடயம் இல்லை. கம்யூட்டரில் கற்றிருப்போர் எல்லோரும் திட்டவரைபு ஒன்றை தயாரிக்க முடியாது என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு தொழிலை நீங்கள் ஆரம்பிக்க நினைத்தால் அத்துறை சார்ந்த விபரங்கள் A - Z ஓரளவுக்கு என்றாலும் தெளிவாக தெரிந்து இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தொழிலுக்கும் வெவ்வேறு திட்டங்கள், தேவைகள் இருக்கலாம். அதனால் விடயம் தெரியாமல் ஆங்கிலத்தில் கம்யூட்டரில் பெயர் விலாசம் விபரம் எழுதி நான்கு வரிகளில்இந்த திட்டத்துக்குரிய திட்ட வரைபு தயாரிக்க முடியாது. அந்தந்த துறை சார் அனுபவசாலிகள் ஆலோசனை தேவை
🌳
உதாரணமாக கீரையை எடுத்து கொள்வோம்.....! முளைக்கீரை, முருங்கை கீரை,வல்லாரை,பொன்னாங்கண்ணி,சிறுகீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, லெச்சகெட்டான் கீரை, கொத்தமல்லி கீரை, பாலக்கீரை, மணத்தக்காளி கீரை, பருப்புக்கீரை, புதினா, கருவேப்பிலை போன்ற கீரைகளின் வகைகள் உள்ளன.
ஏதாவது ஒரு கீரையை தேர்வு செய்தால்
✔️
அந்த கீரையை பயிர் செய்ய எவ்வளவு நிலம் தேவைப்படும்?
✔️
அந்த இடத்தில் எவ்வாறு பயிர் செய்வது?
✔️
நோய்கள் தாக்காமல் பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும்?
✔️
எவ்வாறு பராமரிப்பது?
✔️
எத்தனை நாட்களில் அறுவடை செய்வது?
✔️
எவ்வளவு முதலீடு தேவை?
✔️
எவ்வளவு இலாபம் கிடைக்கும்?
✔️
தேவையான மின்சாரம்
✔️
இயந்திரங்கள்
✔️
நீர்ப்பாசனங்கள்
இப்படி ஒரு கீரை பாத்தி போடவே இவ்வளவு விபரம் தேவை. இந்த தெளிவு குறித்த விபரங்களை எழுத்தில் ஆவணப்படுத்துவது தான் திட்டத்தின் வரைபு.
வேளாண்மைத் தொழிலை இயற்கையோடு நிகழ்த்தும் முறைகளாக "நிலைகொள் வேளாண்மை" (permaculture) மற்றும் "உயிரி வேளாண்மை" (organic agriculture)
🌴
தென்னையை பிரதானமாக கொண்டு அதனுள் ஊடு பயிர்களை கீரைகள், தானியங்கள், பணப்பயிர்கள், பயறு வகைகள், காய்கள், மலர்கள் , கால்நடை வளர்ப்பு, என்ற திட்டமும் அதற்கான முயற்சியும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
விவசாயம்.பண்ணை வளர்ப்பு, மீன் இறால் வளர்ப்பு, கைத்தொழில் என அனைவருக்கும் பயன் படும் விதமாக திட்ட வரைபு சம்பந்தமாக பதிவு விபரமாக எழுத வேண்டும்.அனுபவம் வாய்ந்தோர் மூத்தவர்கள் தயை கூர்ந்து எதை எங்கே எப்படி எவ்வளவு என கொஞ்சம் எழுதுங்களேன்.
✔️
இலங்கைக்குள் எங்கே என்ன செய்யலாம்..?
✔️
தேவையான நிதி எவ்வளவு?
அரசு அறிவிக்கும் அபிவிடுத்தி முன்னேற்றம் சார்ந்த பல விடயங்கள் தமிழருக்கு தடையாகும் காரணங்களில் இந்த தெளிவான திட்டம் இல்லாமையும் இருக்குமோ என்று எனக்குள் தோன்றுகின்றது. என்னிடம் திட்டவரைவு உதவி கேட்டு வந்திருக்கும் பலருக்கு திட்டம் இருக்கு.. தெளிவான விபரம் இல்லை. இவர்களை இப்படி விட்டால் இந்த வாய்ப்பும் கடுமையாகும்.
ஆற்றலும், ஆர்வமும் மட்டும் போதாது. முயற்சி குறித்த தெளிவான திட்டமும் இருந்தால் தானே அரசின் நிழச்சிநிரலுக்குள் நுழைய முடியும்....!
கொரோனா வுக்கு பின் உலகமே பெரும் உணவு தட்டுப்பாட்டுக்குள் சிக்கி கொள்ளும் என்று உலக உணவு அமைப்பு பல முறை எச்சரித்து உள்ளது. ( இப்போதும் பல ஆபிரிக்க ஆசிய தேசங்களில் ஒரு நேரம் உணவு இல்லாமல் பல மில்லியன் மக்கள் பசியில் துடிக்கின்றார்கள்.) இலங்கை வாழ் மக்களுக்கு இது
அருமையான
வாய்ப்பு. சரியாக பயன்படுத்தி தங்களையும், எங்களையும் பசியிலிருந்து காப்பாற்ற நாங்கள் இன்றே உணர்ந்து உதவி செய்ய வேண்டும்.
பதிவு ஷேர் ஆனாலும் அங்கங்கே எழுதாமல் என் நேரடி பதிவில் உங்கள் கருத்த்தை எழுதினால் பேருதவியாக இருக்கும். பலருக்கு பயன் படும்.
💝