Header Ads

  • Breaking News

    ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதலை நடத்துவது குறித்து ஆராய்ந்தார் டிரம்ப் | Trincoinfo


    டொனால்ட் டிரம்ப் ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதலை குறித்து ஆராய்ந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
    அமெரிக்க அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
    ஈரானின் அணுஉலைகளை தாக்க முடியுமா என கேள்வி எழுப்பி ஆராய்ந்த டொனால்ட் டிரம்ப் பின்னர் அந்த யோசனையை கைவிட்டுள்ளார்.
    துணை ஜனாதிபதி மைக்பென்ஸ் இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ புதிய பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டொபர் மில்லர் ஆகியோருடன் டிரம்ப் இது குறித்து ஆராய்ந்துள்ளார்.

    ஈரானின் அணுஉலை மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு டிரம்ப் திட்டமிட்டது குறித்து நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
    ஈரானின் அணுஉலை மீதான தாக்குதல் பரந்துபட்டமோதலிற்கு வழிவகுக்கும் என தெரிவித்து சிரேஸ்ட அதிகாரிகள் டிரம்பின் யோசனையை நிராகரித்துள்ளனர்.
    அவர் தாக்குதலுக்கான சாத்தியப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார் அவர்கள் என்ன நடைபெறலாம் என்பதை விவரித்தனர் அதன் தாக்குதலை மேற்கொள்வதில்லை என டிரம்ப் தீர்மானித்தார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
    வெள்ளை மாளிகை இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad