Header Ads

  • Breaking News

    இருமல் மூலம் கொரோனாத் தொற்றைக் கண்டறியும் செயலி கண்டுபிடிப்பு! | Trincoinfo

    .


    இருமல் மூலம் கொரோனாத் தொற்றினைக் கண்டறியும் புதிய வகை செயலியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

    இந் நிலையில் மாசசூசெட்ஸ் (Massachusetts) தொழிநுட்ப மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மக்களின் இருமலை ஆய்வு செய்து கொரோனாத் தொற்று உள்ளதா என்பதை தெரிவிக்கும் செயலியொன்றை உருவாக்கியுள்ளனர்.

    பல்வேறு ஒன்லைன் தகவல்களின் படி, ஆராய்ச்சியாளர்கள் மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பங்களை பயன்படுத்தி கொரோனாத்  தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை செயலி கண்டறிந்து தெரிவிக்கிறது.

    ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா தொற்று ஏற்பட்ட 70 ஆயிரம் பேரின் இருமல் சத்தங்களை ஆய்வு செய்தனர். பின் 2 லட்சம் இருமல் பதிவுகளை ஆய்வு செய்து 2500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்தது.

    இவ் ஆய்வில் செயலி 98.5 %  சரியாக முடிவுகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad