Header Ads

  • Breaking News

    தீபாவளிக்கு ரிலிஸாகிறது மாஸ்டர் டீசர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Trincoinfo

     


    விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளியன்று(நவம்பர் 14) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று மாலை 6 மாஸ்டர் அப்டேட் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் டீசர் தீபாவளி அன்று சன்டிவி யூடியுப் பக்கத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

    பாவளிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் ரிலிஸாகும் என்ற அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் டீசரை இப்போதே டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’.அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

    தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திரையரங்கில் படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருந்தது படக்குழு. இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருப்பதால் ‘மாஸ்டர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று தயாரிப்பாளர் லலித்குமார் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad