Header Ads

  • Breaking News

    தளபதி விஜய் குறித்து ட்விட் போட்ட கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி | Trincoinfo

     


    தளபதி விஜய் அவர்களை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி.

    அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஈபிள் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி.இவர் ஐபில் தொடர் நடந்தபோது சட்டையில்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டபோது அவரது கையில் விஜயின் தலைவா பட போஸ் இருந்தது.

    அதன் மூலம் அவர் தளபதி ரசிகர் என அறியப்பட்டார்.மேலும் வருண் சக்கரவர்த்தி அவர்களும் தளபதியை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நடிகர் விஜயை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருண் சக்ரவர்த்தி, உள்ள வந்தா பவருடி.. அண்ணன் யாரு? தளபதி என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

    இந்த சந்திப்பு தளபதி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad