Header Ads

  • Breaking News

    திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் மண்டபமொன்று உள்ளது... | Trincoinfo

     


    திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள விளையாட்டரங்கு கட்டடத்தின் முதலாம் மாடியில் ஏறத்தாழ 12 ½ அடி அகலமும் 80 அடி நீளமும் உள்ள மண்டபமொன்று உள்ளது.

    இம்மண்டபத்திற்கு இலகுவாக ஏறி செல்லக்கூடிய வகையில் ஒரு படி அமைப்பு இல்லாமையால் அம்மண்டபமானது பெரிதளவில் பாவிக்கப்படாமல் மூடிய நிலையிலேயே காணப்படுகின்றது என்பதை நகரசபையால் அவதாணிக்கப்பட்டது.
    தற்போது இம்மண்டபத்திற்கு செல்லும் படிகட்டானது பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் படிக்கட்டின் வழியேத்தான் செல்லவேண்டியுள்ளது. இந்த படியின் உயரம் 1 முதல் 1 ½ அடி உயரம் உள்ளதால் அதனை பாவிப்பது மிகவும் சிரமமாகயிருந்தது. இதனை கருத்திற்க்கொண்டு இம்மண்டபத்திற்கு இலகுவாக ஏறி செல்லக்கூடிய வகையில் கீழே வரைபடத்தில் காட்டியவாறு படிக்கட்டு அமைக்கப்படவுள்ளது.

    இம்மண்டபமானது சிறுகருத்தரங்கு, பாலர் பாடசாலை நிகழ்வுகள், பிறந்தநாள் வைபவங்கள், சிறிய கூட்டங்கள், வேலை பட்டறைகள் (Work Shop) மற்றும் விளையாட்டு வீரர்கள் தமது பயிற்சி வகுப்புக்களை நடாத்துவதற்கும் பொருத்தாக அமையும்.
    நகராட்சிமன்றத்தின் நகர மண்டபம், குளக்கோட்டன் மண்டபம் இரண்டுமே தற்சமயம் பொதுமக்கள் பாவனைக்கு விடப்படுகின்றது.
    மேற்கூறிய மண்டபத்திற்கான படி அமைக்கப்பட்டதும் இம்மண்டபத்தினை சிறிய தொகையை அறவிட்டு பொதுமக்கள் பாவனைக்கு வழங்க நகரசபை திட்டமிட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு வருவோர்களின் வாகனங்களை தரித்து வைப்பதற்கு ஏற்றவாறு வாகன தரிப்பிட வசதியும் உள்ளது. அத்துடன் இவ்விடம் ஒரு அமைதியான சூழலில் அமைந்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் இம்மண்டபத்திற்கு குளிரூட்டியும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்குறித்த படிக்கட்டை அமைப்பதற்கான கேள்விகள் நகராட்சிமன்றத்தால் கோரப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஒப்பந்தக்காரர்கள் இவ்வேலையை மேற்கொள்வதற்கு முன்வரல் வேண்டும் என நகராட்சிமன்றம் கேட்டுக்கொள்கின்றது.
    தலைவர் - நகராட்சிமன்றம் - திருகோணமலை.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad