Header Ads

  • Breaking News

    பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: இன்று விசேட அறிவிப்பு வெளியாகும் | Trincoinfo

     


    பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு இன்று வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

    பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிப்பதற்காக ஏற்கனவே திட்டமிடப்படிருந்தது. 

    எனினும் தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் சார்பானதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

    பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நேற்றைய தினம் பல முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இக்கலந்துரையாடல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து இன்றைய தினம் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad