Header Ads

  • Breaking News

    திருகோணமலையில் மான் கூட்டங்களின் அவலநிலை | Trincoinfo

     

    திருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்காக மான் கூட்டங்கள் அலைந்து திரிவதுடன், அவை உணவுக்காக பொலிதீன் பைகளை உண்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
    திருகோணமலை மாவட்டத்தின் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அண்டிய பகுதியில் நீண்ட காலமாக உள்ள இந்த மான் கூட்டங்கள் உணவுகள் இன்றி வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் சுற்றித் திரிக்கின்றன.
    அதேபோன்று உணவுக்காக திருகோணமலை சிறைச்சாலையை அண்டிய பகுதியில் மான் கூட்டங்கள் பொலித்தீன் உறைகள் மற்றும் கழிவுகளையும் உண்டு வருகின்றன.
    மான்களுக்கான சிறந்த பராமரிப்புகள் மற்றும் உணவுகள் இன்மையால் வீதியை கடக்க முற்படுகின்றமை, பொலித்தீன் பைகளை உண்கின்றமை, மற்றும் கயவர்களால் வேட்டையாடப்படல் என வருடத்திற்கு சராசரியாக பத்துக்கும் மேற்பட்ட மான்கள் இறந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
    இவ்வாறான பிரச்சனை எழும்போது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும் பின்னர் சரியான பராமரிப்பு இல்லாமல் அது கைவிடப்படுவதுமே வழக்கமாக உள்ளது.
    கொரோனா காலமாகையால் அவற்றுக்க உணவளிப்பதில் பல சிக்கல்நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில், பொது தொண்டு நிறுவனங்கள் இதனை கவனமெடுக்காவிடின் எம் திருகோணமலை அடையாளங்களில் ஒன்றை நாம் இழக்க நேரிடும்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad