Header Ads

  • Breaking News

    கொரோனா வைரஸை அழிக்கும் புதிய Spray கண்டுபிடிப்பு! | Trincoinfo


    முகக்கவசம்,  உடல் கவச ஆடை ஆகியவற்றில் தெளித்தால் 48 மணி நேரம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் தெளிப்பான் ஒன்றை பிரேஸில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

    உலோக அயனிகள் மற்றும் இயற்கை பொலிமர்களை சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ள குறித்த தெளி ப்பானுக்கு ஸ்பிரேகோவ்(SprayCov)  என பெயரிடப்பட்டுள்ளது.

    இத் தெளிப்பானை  தெளித்த  ஒரு நிமிடத்தில் அது கொரோனா வைரஸை அழிப்பதுடன் அடுத்த 48 மணி நேரத்திற்கு அந்த தொற்று பரவாமல் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பருத்தியால் ஆன முக கவசங்களிலும் இதை தெளிக்கலாம்.  எனவே சாதாரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களிலும் இந்த தெளிப்பானை  பயன்படுத்து தொற்று பரவாமல் தடுக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad