Header Ads

  • Breaking News

    திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு COVID- 19 தொற்று உறுதி.


    திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு COVID- 19 தொற்று உறுதி.

    வைத்தியர் ஒருவருக்கும் சிற்றூளியர் ஒருவருக்கும் தொற்று....!!!
    வாழைச்சேனையில் தனிமைப்படுத்தலில் இருந்த திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிற்றுளியர் ஒருவரை கடமைகளை பொறுப்பேற்குமாறு வைத்தியசாலையின் உயர் மட்ட அதிகாரி வற்புருத்தியதாகவும் அதன் கரணமாகவே அவர் திருகோணமலைக்கு வருகைதந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    அவர் திருகோணமலைக்கு வருகைதந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு இன்றையதினம் COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
    மேலும் முதலில் திருகோணமலையில் அடையாளங்காணப்பட்ட வைத்தியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வைத்தியர் ஒருவருக்கும் தொற்று உறுதி
    அத்துடன் லிங்கநகர் பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி அவர் தற்போது கொழும்பில் இருப்பதாகவும் கடந்த மாதம் 24ம் திகதி திருகோணமலைக்கு வந்து சென்றுள்ளதாகவும் தகவல்.
    இதனால் திருகோணமலையில் மொத்தமாக 14 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர்.

    1 கருத்து:

    Post Top Ad

    Post Bottom Ad