Header Ads

  • Breaking News

    இலங்கையர்களுக்கு மத்திய வங்கி வழங்கும் சலுகை!

     

    கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகளை வழங்க மத்திய வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


    ஆறுமாத சலுகைக் காலம் உள்ளடங்கலாக 24 மாதங்களை கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதி கடன் பெறுநர்களுக்கு வழங்கப்படும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

    வருடத்திற்கு 4 சதவீத வட்டிவீதத்தில் மூலதனக் கடன்களை வழங்க கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் வசதியினை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் மத்திய வங்கி மூன்று கட்டங்களில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

    தற்போது ஏற்பட்டுள்ள 2ம் அலை காரணமாக எதிர்பார்க்கப்பட்ட தொழில்களை சீரமைத்து கொள்வதில் அநேக கடன்பெறுநர்கள் இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

    கடன்பெறுநர்களிற்கு தேவையான வசதிகளை மேம்படுத்த மத்திய வங்கி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

    இது குறித்த வாய்ப்புக்களை பெற்று கொள்ள எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்தால் குறித்த சலுகை காலத்தினை நீடிக்கலாம் எனவும் சுற்றுலா, விவசாயம், கட்டுமானம், உணவு உற்பத்தி போன்ற தொழிற்துறைகைளிற்கும் தனிப்பட்ட வர்த்தகர்களும் இந்த சலுகைகளை பெற்று கொள்ள முடியுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad