Header Ads

  • Breaking News

    பண்ணை வீட்டில்.. புழுதி கிளப்ப காரில் வந்திறங்கிய விஜய்.. பயங்கர எதிர்பார்ப்பில் நிர்வாகிகள்.

     


    பரபரப்பான சூழலில், இன்று தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் விஜய்.. அப்பா சந்திரசேகர் கட்சி தொடங்கிய நிலையில் விஜய் திடீர் ஆலோசனை நடத்துகிறார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. காலை 11 மணிக்கே ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதுதான் நிர்வாகிகளுடன் விஜய் பேசி வருகிறார். கடந்த ஒரு வாரமாகவே நடிகர் விஜய் விவகாரம் தலைதூக்கி வருகிறது... விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற பொதுப்படையான கேள்வி ரசிகர்களிடம் நிலவி வந்தது. இந்த நேரத்தில் திடீரென, டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர், கட்சிக்கான விண்ணப்பத்தை ரிஜிஸ்டர் செய்தார்.. அதனால் விஜய்தான் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவ... அடுத்த சில நிமிடங்களிலேயே, எஸ்ஏசி அதற்கு விளக்கம் தர.. அதற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே விஜய் அறிக்கை வெளியாக.. தமிழகத்தையே பெரும் பரபரப்பு சூழ்ந்து கொண்டது.

    இதற்கு பிறகுதான் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் நடந்தது.. விஜய்யும் அவர் அப்பாவும் பேசிக் கொள்வதில்லை என்றும், தனக்கு தெரியாமலேயே தன் கணவர் தன்னிடம் கையெழுத்து வாங்கிவிட்டதாகவும் ஷோபா சொல்ல, ஒரே நாளில் அந்த கட்சி உடைந்தது.. பொருளாளர் ஷோபாவும் ஒரே நாளில் விலகி கொண்டார்.

    இவ்வளவு நடந்தும் ரசிகர்கள் அமைதியாக உள்ளனர்.. பொறுமை காத்து வருகின்றனர்.. விஜய் என்ற மனிதர் மீது அபரிமிதமான நம்பிக்கை காரணமாக, குழப்ப மனநிலையில் இருந்தாலும், எந்த அதிருப்தியையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.. விஜய்யே வாயை திறந்து அனைத்தையும் வெளிப்படையாக தெரிவிப்பார், தங்களிடம் பேசுவார் என்று நம்பினர்.. அந்த நம்பிக்கையும் இப்போது வீண் போகவில்லை.

    தற்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் இன்று சந்தித்து பேச உள்ளார்.. வழக்கமாக பனையூரில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில்தான் நிர்வாகிகளை சந்தித்து பேசுவது வழக்கம்.. அதன்படியே தற்போதும் திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச போவதாக சொல்லப்படுகிறது.
    எதற்காக இந்த சந்திப்பு என்று உடனடியாக தெரியவில்லை.. ஆனால், நிச்சயம் தன் நிலைப்பாட்டை மேலும் ஒருமுறை தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 11 மணிக்கே ஆலோசனை நடக்கும் என்றும் சொல்லப்பட்டது.. ஆனால் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தும் விஜய் வராமல் இருந்தார்.. எப்படியும் மதியத்துக்கு மேல் வந்துவிடுவார் என்பதால், நிர்வாகிகளும், ரசிகர்களும் அங்கே திரண்டு காத்திருந்தனர்.. அதன்படியே தற்போது காரில் வந்திறங்கினார் விஜய்.. தற்போது நிர்வாகிகளுடன் கலந்து பேசி வருகிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad