Header Ads

 • Breaking News

  திருகோணமலை இந்துமயானம் பல முறைப்பாடுகள் - நகராட்சி மன்றம் நடவடிக்கை


   

  திருகோணமலை இந்துமயானம் திருகோணமலை இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வந்தது. இதற்குரிய இடமானது திரு.மயில்வாகனம் முதலியார் சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்ட காணியில் அமைந்துள்ளது. இதுவரை காலமும் பல இக்கட்டான சூழ்நிலையிலும் கூட இவ் இந்து மயானத்தை முன்னைய இந்து இளைஞர் மன்றத்தின் நிர்வாகம் திறம்பட மக்கள் முறைபாடின்றி பாராமரித்து வந்தது. தற்சமயமுள்ள நிர்வாகத்தினால் இம்மயானம் சரிவர பராமரிக்கப்படாமையினால் பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் நகரசபைக்கு கிடைக்கப்பெற்றன.

  இம்முறைபாட்டை கருத்திற்க்கொண்டு நகரசபையானது பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தது. அண்மையில் இவ் இந்துமயானத்தை காவல் காப்பதற்கு இந்து இளைஞர் மன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒருவர் DAN தொலைகாட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இந்து இளைஞர் மன்றத்தினால் பலமுறை இம்மயானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு கேட்டபோதும், தற்போதுள்ள நகரசபை தலைவர் அதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அவர் இந்த நகரசபை தலைவர் பதவிக்கு பொருத்தமற்றவர் என தெரிவித்துள்ளதை DAN தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட காணொளி கீழே உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது.

  மேலும் நகராட்சிமன்றம் இந்த மயானத்தை புனரமைப்பதற்கென பல வேலைத்திட்டங்களை ஒன்றறை வருடங்களுக்கு முன்பே தயாரித்துள்ளது.

  1. மயானத்தின் நடுவே நல்லடக்கம் செய்வதற்கு உடலை கொண்டு செல்லும் பாதை கல்லும் முள்ளும் நிறைந்ததாக காணப்படுவதால் முதற்கட்டணமாக அதற்கு கிரவலிட்டு சீரமைத்தல்.
  2. அங்குள்ள கிணற்றை துப்பரவு செய்து நீர்த்தாங்கி பொருத்தப்பட்டு அங்கு நடைபெறும் சடங்குகளுக்கு நீரை பெற்றுக்கொள்வதற்கான திட்டம்.

  3. தற்சமயம் இம்மயானத்திற்கு அருகேயுள்ள கடற்தொழிலாளர்கள் இம்மயானத்தினூடாக பயணிப்பாதை தவிர்க்கும் முகமாக கீழே தரப்பட்ட வரைபடத்தில் சிவப்பு நிறத்தால் காட்டப்பட்ட 10 அடி அகலமான கடலோர பாதையை அமைத்து கொடுப்பதன் மூலம் பிறர் தேவையற்ற விதத்தில் இம்மயானம் ஊடாக பயணிப்பதை தடை செய்தல்.

  4. கட்டாக்காளி மாடுகள் மற்றும் வேறு துஸ்பிரயோகங்களுக்காக உள்ளே வருபவர்களை தடுப்பதற்காக அமைக்கப்படவுள்ள கடலோர பாதை அருகே பாதுகாப்பு வேலி அமைத்தல்

  5. அடக்கம் செய்யும் உடல்களை ஒழுங்கு முறையில் அடக்கம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளக நடைபாதை அமைத்து அதன் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின்; மேலே ஏறி செய்வதை தடுத்தல் மற்றும் அமைக்கப்படும் பாதைகள் அருகே நிழல் தரும் மரங்கள், பூக்கன்றுகளை அமைத்து மயானத்தை சோலையாக மாற்றுதல்.
  இவ்லேலைத்திட்டங்கள் நகராட்சிமன்ற சபைக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது சில உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் திருகோணமலை இந்து இளைஞர் மன்றத்தின் தற்போதைய செயலாளரும் நகராட்சிமன்றத்தால் போடப்பட்ட 10 லோட் கிரவலை கொண்டு பாதை அமைக்க இடம் தரவில்லை. இவ்வாறான நிலையில் நகராட்சிமன்றம் இந்து இளைஞர் மன்றத்தின் செயலளாருக்கு கடிதமொன்றை 27.12.2019 அன்;று அனுப்பியிருந்த கடிதத்தில் இந்து இளைஞர் மன்றமும் நகராட்சிமன்றமும் சேர்ந்து இவ்வேலைத்திட்டங்களை செய்வதற்கு இணங்கி வருமாறு கோரியிருந்தது அதற்கு எதுவித பதிலும் கிடைக்கவி;ல்லை. கீழே அக்கடிதம் தரப்பட்டுள்ளது.

  1899 ஆம் ஆண்டு 9ம் இலக்க மயானங்கள் மற்றும் சுடலையின் கட்டளை சட்டத்தின் (231ம் அத்தியாயம்) ஏற்பாட்டிற்கமைய சகல மயானங்களும் உள்ளுராட்சி சபைகளினால் மட்டுமே பராமரிக்கப்படல் வேண்டும். எனினும் இந்து இளைஞர் மன்றம் தாமாக முன்வந்து இதுவரை காலமும் ஆற்றிய சேவையை கருத்திற்க்கொண்டு எதிர்வரும் காலத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் நகராட்சிமன்றமும் இந்து இளைஞர் மன்றமும் இணைந்து கூட்டாக இந்த பராமரிப்பு வேலையை செய்ய முன்வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுத்த போதும் மயானத்தை பூட்டி வைத்திருப்பதோடு அதன் திறப்புக்களை அவர்களே வைத்திருக்கின்றனர்.

  இது தொடர்பாக பொலிசாரிடம் நகரசபையால் 06.11.2020 அன்று முறைப்பாடு செய்யப்பட்டது. 07.11.2020 அன்று இடம்பெற்ற விசாரணை முடிவில் பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்ற ஆணையைப்பெற்று அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளுமாறு கூறப்பட்டது இதற்கமைய நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. என்பதை நகராட்சிமன்றம் அறியத்தருகின்றது. இதற்கு அருகேயுள்ள பொதுமயானத்திலுள்ள கட்டடம் தற்சமயம் நகராட்சிமன்றத்தால் புனரமைக்கப்பட்டு வருகின்றது. நீதிமன்ற தீர்ப்பு நகராட்சிமன்றத்திற்கு சாதகமாக அமையும் பட்சத்தில் நகராட்சிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் யாவும் மேற்கொள்ளப்படும் என்பதை நகராட்சி மன்றம் தெரிவித்துக்கொள்கின்றது.

  தலைவர்
  நகராட்சி மன்றம்
  திருகோணமலை.

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad