Header Ads

  • Breaking News

    திருகோணமலை - தென்னமரவடி மற்றும் திரியாய் மக்களுக்கு வெற்றி

     


    திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள தென்னமரவடி மற்றும் திரியாய் ஊர்களில் ஒரு நூற்றாண்டிற்குக் கூடுதலாகத் தமிழ் மக்கள்வேளாண்மை செய்துவரும் வயல்களில் தொல் பொருள் இருப்பதாகக் கூறி அண்ணளவாக ஆயிரம் ஏக்கரில் இம்முறை வேளாண்மை செய்ய விடாமல் தொல்லியல் துறை தடுத்து நிறுத்தி உள்ளது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்த வழங்குத் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் அவர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது

    வழக்கை விசாரித்த நீதிபதி தொல்லியல் துறையின் நடவடிக்கைக்குத் தடையுத்தரவு வழங்கித் தீர்ப்பு வழங்கினார். திரியாய் மற்றும் தென்னமரவடி மக்கள் தமது சொந்த வயல்களில் விவசாயம் செய்வதை யாரும் தடுக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார். வழக்கு 2020.11.23 ஆம் நாள் மீண்டும் விசாரணைக்கு வரும். வழக்கறிஞர்கள் திரு எம் ஏ சுமந்திரன் திரு கேசவன் சயந்தன் செவ்வி பிரசாந்தி உதயகுமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலை ஆகியிருந்தனர்.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad