Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஒரு லட்சம் ஏக்கர் காணித்துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த அரசாங்கம் முடிவெடுத்து விண்ணப்பங்கள் கோரியது!!


நீங்கள் இன்று விண்ணப்பிக்காமல் விடுவதால் என்ன நடக்கலாம்..?
தமிழ் மக்கள் அல்லாதவர்கள் கூட பெருமளவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை பெற்றுக்கொண்டு தங்கள் தொழில்களை/விவசாயத்தை முன்னெடுத்து காலப்போக்கில் நிரந்தரமாக அந்த பிரதேசங்களில் குடியேறிவிடவும் கூடும்...
 #அருமையானவாய்ப்பு

இலகுவாக என்ன செய்யலாம்??

ஒரு லட்சம் ஏக்கர் காணித்துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த அரசாங்கம் முடிவெடுத்து விண்ணப்பங்கள் கோரியது!!

ஆனால் எங்கள் இளைஞர்கள் பலர் இதில் அக்கறை எடுப்பதாக தெரியவில்லை!! மிகக்குறுகிய விண்ணப்பங்களே கிடைத்ததால் விண்ணப்ப முடிவு திகதி 15.11.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது!!

நம் இளைஞர்கள் அக்கறை காட்டவில்லை என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது!!
காணி கிடைத்தால் முழுநேர விவசாயம் தான் செய்யவேண்டியதில்லை!!! காணியில் வெறுமனே விவசாயம் மட்டும் தான் செய்ய முடியும் என்ற மாயையில் இருந்து முதலில் வெளியே வாருங்கள்!!
இன்று உங்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. அதை நாம் பயன்படுத்தாமல் விடுவதால் வாய்ப்புகளை இன்னொருவர் பறித்துக்கொள்வார் அல்லது பயன்படுத்திக்கொள்வார்!!
முக்கியமாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் அதிகம் அரச காணிகள் இருக்கின்றன.
அத்துடன் அரச காடுகளையும் பயன்படுத்திக்கொள்ள மாவட்டங்களுக்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. காட்டு இலாகாவும் இணைந்து செயற்பட உள்ளது!!
இன்று இந்த வாய்ப்பு தமிழ் இளைஞர்கள் பயன்படுத்தாவிடின் நாளை இதன் விளைவுகள் உங்களுக்கு எதிராகவும் எங்கள் அரசியல் கட்சிகள் இவ்வாறான தேவையான நேரங்களில் அடைகாத்துவிட்டு, பின்னர் மக்களை திரட்டி தங்கள் அரசியலுக்காக கூச்சலிடும் சூழலை மட்டுமே விட்டுவைக்கும்..!
✅ யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்??
🔹18- 45 வயதுக்கு உட்பட்ட இலங்கை பிரஜைகள் விண்ணப்பிக்கலாம்!!
🔹 சுய தொழில் முயற்சி தொடர்பான அபிவிருத்தி செய்யும் ஆர்வம் இருப்போர்
🔹 உள் நாட்டு, வெளி நாட்டு சந்தை உற்பத்தியில் ஆர்வமிருப்போர்
🔹 இப்போது குடியிருக்கும் காணி நிரூபணம் பிரச்சனை இருப்போர்
🔹 இப்பேதைய சுயதொழில் திட்டங்களுக்கு மேலும் அபிவிருத்தி செய்ய நினைப்போர்
🔹 குழுவாக இணைந்து கூட்டுப்பண்ணை,
விவசாயம் செய்யும் ஆர்வம் இருப்போருக்கு முன்னுரிமை கிடைக்கும்.
🔹பண்ணை, மீன்வளர்ப்பு, சிறு தொழிற்சாலை, போன்ற தொழில் முயற்சியாளர்கள், முதலில் பிரதேச செயலகத்தின் காணி அலுவலரை சென்று சந்தித்து பொருத்தமான அரச காணி விபரங்களை சேகரித்து தெளிவான திட்ட அறிக்கையையும் இணைத்து அனுப்புவது நல்லது!!
எல்லா மாவட்டங்களிலுமிருந்தும்
நீங்கள் எந்த தொழில் செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை!! அந்த தொழிலை செய்து கொண்டே இந்த காணியில் புதிய தொழில் முயற்சிகளை தொடங்கலாம்!! விண்ணப்பதாரர்களின், திட்டம், நோக்கத்துக்கு ஏற்ப இடம் ஒதுக்கப்படலாம்
✅ எங்கே விண்ணப்பிக்கலாம்
இலங்கைக்குள் அரசுக்காணிகள் இருக்கும் இடங்களில் அப்பகுதி பிரதேச சபையினுடாக விண்ணப்பிக்கலாம்.
(அரச காடுகள் reserved forests ஆயின் இத்திட்டத்திற்கு தரமாட்டார்கள். ) உங்கள் சொந்த பிரதேச செயலகத்துக்கு அனுப்பும் விண்ணப்ப படிவத்தின் பிரதியை, நீங்கள் காணி கேட்கும் பிரதேச செயலகத்துக்கும் அனுப்பிவிடவும்!!
விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பித்தால் அலுவலர் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தி கையெழுத்து வாங்கிக்கொள்ளுங்கள், தபாலில் அனுப்பும் போது முடிந்தவரை பதிவுத்தபாலில் அனுப்பவும்..
✅ குறிப்பாக எவ்வாறான இடங்களில் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்??
யாழ்ப்பாணத்தில் அரச காணிகள் மிகக் குறைவு.. ஆக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படவும் கூடும்..

விண்ணப்பங்களை நிரப்பி பிரதேச செயலகத்துக்கு அனுப்பிவிடுங்கள்!!
✅ விண்ணப்பங்களை எங்கே அனுப்ப வேண்டும்..?
காணி எந்த பிரதேச செயலர் பிரிவில் தேவை என்று விண்ணப்பிக்கிறீர்களோ அந்த அந்த பிரதேச செயலகத்தில் காணிக்கு என பொறுப்பாக இருப்பவரை சென்று சந்தித்து விபரத்தை கேளுங்கள். காணி இருக்குமாயின் விண்ணப்பியுங்கள்
நீங்கள் எந்த பிரதேச செயலர் பிரிவுக்கும் அனுப்பலாம்.. ஆனால் நம்மவர்கள் வைத்து இழுப்பார்கள்...
சிலர் காணி தேவையான பிரதேச செயலர் பிரிவுகளில் விண்ணப்பிக்கவும் சொல்கிறார்கள்.. ஒரு பாதுகாப்புக்கு இரண்டையும் விண்ணப்பிக்கலாம்.
தேவையான இடத்தில் தான் காணிகளை ஒதுக்குவார்கள்.. எங்கு அனுப்பினால் உங்களால் சற்று அடிக்கடி சென்று பார்த்து அதிகாரிகளை அழுத்த மு டியுமோ அங்கே விண்ணப்பியுங்கள்.
முதலில் காணிகளை பெற்றுக்கொள்ளுங்கள்!! செய்யக்கூடிய வேலைகள் ஏராளம் உள்ளன!!
யாருக்காவது உதவி தேவைப்படின் உட்பெட்டியில் தொடர்புகொள்ளுங்கள்!!


ஒரு சமூகமாக நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்வோம்

நன்றி#அருமையானவாய்ப்பு
விண்ணப்ப படிவம்
இளம் தொழில்முனைவோருக்கு 100000 நிலங்கள் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குதல். மாதிரி விண்ணப்ப படிவம் (இங்கே பதிவிறக்கவும்)