Header Ads

  • Breaking News

    மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அனுமதி; 24 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தல் அமுலில்

     


    மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கான பயணங்களுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நீக்கப்பட்டன.

    இருப்பினும், 24 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

    அதன் படி, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த மட்டக்குளி, மோதர, புளுமென்டல்,கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ் மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகள் மேலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.

    ஆட்டுப்பட்டித்தெரு , மாலிகாவத்தை, தெமட்ட கொடை, வெல்லம்பிட்டி, வாழைத்தோட்டம் மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் இன்றும் தனிமைப் படுத்தப் பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    இது தவிர மருதானை , கொழும்பு கோட்டை , புற கோட் டை, கொம்பனி வீதி மற்றும் டாம் வீதி ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளும் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள் ளன.

    கம்பாஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, கட வத் தை, ராகம,வத்தளை, மற்றும் பேலியகொட ஆகிய பொ லிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறி விக்கப்பட்டுள்ளன.

    அத்துடன் , இன்று அதிகாலை 5 மணி முதல் களனி பொ லிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad