Header Ads

  • Breaking News

    திருகோணமலை இந்து மகளிர் கல்லூரி மாணவி 194 புள்ளி புலமைப் பரிசில் பரீட்சையில் | Trincoinfo

     

    2020ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் திருகோணமலை இந்து மகளிர் கல்லூரியிலிருந்து 78 மாணவிகள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இது 44 வீதமான சித்தி வீதமாகும். செல்வி. அகன்சா மகேந்திரராசா என்ற மாணவி 194புள்ளிகளைப்பெற்று பாடசாலை மட்டத்தில் முன்னணியில் திகழ்கின்றார்.

    இந்த அடைவு மட்டத்தினை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் கல்லூரி அதிபர் தனது மனமுவந்த பாராட்டுகளைத் தெரிவிக்கின்றார். அத்துடன் வெட்டுப் புள்ளிக்கு கீழாக புள்ளிகளைப் பெற்ற மாணவிகளுக்கும் அதிபர் தனது பாராட்டுகளைத் தெரிவிக்கின்றார். ஏனெனில் இந்த நெருக்கடிமிக்க காலத்தில் மாணவர்கள் சாதாரண கற்றல் நடவடிக்கைளை மேற்கொள்வதற்கே மிகப்பெரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

    இந்தவகையில் இவர்களை தன்னலம் பாராது கற்பித்த ஆசிரியர்கள், நெறிப்படுத்திய ஆரம்பப் பிரிவு உதவி அதிபர், பகுதித்தலைவர், மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், வலயக் கல்வி அலுவலகப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் எல்வாவற்றிற்கும் மேலாக எமக்கு வேண்டிய ஒத்துழைப்புகளை வழங்கிய பெற்றோர் அனைவருக்கும் அதிபர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்.


    FB - Shanmuga Trincomalee

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad