Header Ads

  • Breaking News

    13 வயது சிறுவனிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்: சர்ச்சை உருவானதால் வெளியிட்டுள்ள வீடியோ


    டிக்டாக் பிரபலமான ஒரு 19 வயது இளம்பெண், 13 வயது சிறுவன் ஒருவனிடம் மோசமாக நடந்துகொண்டதால் சர்ச்சை உருவானது.

    18 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட டிக்டாக் பிரபலமான Zoe Laverne (19) என்ற இளம்பெண், Connor என்ற 13 வயது சிறுவனுடன் அளவுக்கு மீறி நெருக்கம் காட்டுவதாகவும், அதையெல்லாம் பார்க்கமுடியவில்லை என்றும் கூறி, Zoeவின் முன்னாள் காதலனும், நண்பர் ஒருவரும் அவரைப் பிரிந்தனர்.

    இண்டியானாவைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்ணான Zoe, அந்த சிறுவனை சிறுவர் பாலுறவுக்கு பழக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டும் செய்தி ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து, Zoeயும் Connorம் நெருக்கமாக முத்தமிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்றும் லீக்கானது.

    சர்ச்சை உருவானதும், Zoe தன்னை வன்புணரவில்லை என Connor செய்தி வெளியிட்டார். இப்படி தொடர்ந்து இந்த விடயம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேரலையில் தோன்றிய Zoe, பெரிய விளக்கத்துக்குப் பின், தன் செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டார்.

    நாங்கள் ஒருவரிடம் ஒருவர் ஈர்க்கப்பட்டது உண்மைதான், ஆனால், நாங்கள் செய்தது தவறு என்று தெரிந்ததும் நாங்கள் நிறுத்திக்கொண்டோம் என்று கூறியுள்ளார் Zoe. டிக்டாக் பயன்படுத்தும் பலர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், Zoeயின் பிரச்சினையும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.




    Video Link

    மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

    World News Facebook Page :- Liked

    Facebook Group :- Joined

    World News Viber Group :- Joined

    News Papers Viber Group :- Joined

    மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad