Header Ads

  • Breaking News

    ஆவிபிடித்தால் குணமாகும் நோய்கள் | Trincoinfo

     


    பல விதமான நோய்த்தொற்றுகளையும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்தே தடுக்கமுடியும்.

    ஆவிபிடித்தல் சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளை சரிசெய்கிறது. தீவிரமான சளி மற்றும் இருமல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள் 100 மி.லி. தண்ணீரில் நான்கு பற்கள் தோல் உரித்த அல்லது உரிக்காத, வெ.பூண்டை சேர்த்து, அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை கலந்து நன்கு கொதிக்கவைத்து ஆவிபிடிக்கவும். இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை நீங்கி சுவாசப்பாதை சீராகும்.

    வெ.பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கொண்டு தயாராகும் நீரை ஆவிபிடிக்கும்போது நுரையீரலில் உள்ள நோய்த்தொற்றுகள் அழிக்கப்படும். இதை நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

    ஒரு நாளைக்கு மூன்று வேளை என சில நாட்கள் தொடர்ந்து ஆவிபிடிப்பது சிறந்தது. கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக நுரையீரல் கருதப்படும் நிலையில், இந்த முறையில் ஆவிபிடிப்பது நல்ல பயனளிக்கும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad