Header Ads

  • Breaking News

    பிக் பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா?

     


    பிரபல நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும்  பிக்பொஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியானது  தற்போது  45 நாட்களை கடந்துள்ளது.


    இதுவரை தெலுங்கு பிக் பொஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றும் படலத்தில்  இதுவரை 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    எனினும் வரும் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் படப்பிடிப்பிற்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதையடுத்து இரண்டு நாட்கள் மா்திரம் வேறு யாராவது தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்டது.

    இதற்கு முன்னர் இதே போன்று கடந்த சீசனில் நாகார்ஜுனா வெளிநாடு சென்றபோது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பதால் இந்த முறையும் அவரிடம் பிக்பாஸ் குழுவினர் அணுகினார். ஆனால் அவருக்கு, படப்பிடிப்பு இருந்த காரணத்தால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

    இந் நிலையில் வரும் சனி ஞாயிறு அன்று மட்டும் நடிகையும் நாகார்ஜுனாவின் மருமகளுமான சமந்தா தொகுத்து வழங்குவார் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad