Header Ads

  • Breaking News

    நயன்தாரா குறித்த விக்னேஷ் சிவனின் புதிய அறிவிப்பு!

     


    விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரௌடிதான்’ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 5 வருடங்கள் நிறைவடைகிறது.

    இந் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ”தனது தயாரிப்பில் நயன்தாரா நடிக்கவுள்ள நெற்றிக்கண்’ திரைப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி ‘நானும் ரௌடிதான்’ வெளி வந்து இன்றுடன் 5 வருடங்கள் முடிவடைந்து இருக்கின்றது. அளவில்லா அன்பு மற்றும் பேதரவால் ’நானும் ரௌவுடிதான்’ பல இதயங்களை வென்றெடுத்துள்ளதோடு  எங்கள் வாழ்வையும்  மாற்றியது.

    ஐந்து வருடங்களின் பின்னர்  தற்போது இதே நாளில் எங்கள் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’நெற்றிக்கண்’ தயாராகவுள்ளது.  என்றும் எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உங்களின் அதே அளவிலான அன்பையும் ஆதரவையும் இந்த திரைப்படத்திற்கும் தருவீர்கள் என நம்புகிறோம்.

    ஆசீர்வாதம் அளித்த கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி. நெற்றிக்கண் பஸ்ட் லுக் போஸ்டர் நாளை முதல்’ என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நானும் ரௌடிதான் திரைப்படம் மட்டுமன்றி விக்னேஷ்-நயன் காதலும் ஐந்தாவது வருடத்தை கடந்துள்ளது  என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad