Ticker

6/recent/ticker-posts

துபாயில் கார் கடலுக்குள் பாய்ந்தது: காயமின்றி தப்பி வெளியேறினார் சாரதியான பெண் | Trincoinfo



கார் ஒன்று தவறுதலாக கடலுக்குள் செலுத்தப்பட்ட சம்பவம் துபாயில் இடம்பெற்றுள்ளது.
துபாய் அல் மம்ஸார் கடற்கரையில் வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக  துறைமுக பொலிஸ் நிலைய்தின் கரையொர மீட்புப் பிரிவு பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் அப்துல்லா அல் நக்பி இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
41 வயதான அரேபிய பெண்ணொருவர் செலுத்திச் சென்ற காரே இவ்வாறு கடலுக்குள் பாய்ந்தது என அவர் கூறினார்.
வாகனத் தரிப்பிடத்தில் இருந்த இக்காருக்குள் இருந்த சாரதி, தொலைபேசி ஊடாக கிடைத்த துயரமான செய்தியொன்றையடுத்து, கட்டுப்பாட்டை இழந்து தவறுதலாக அக்ஸிலேட்டரை அழுத்திவிட்டதாக லெப்டினன்ட் கேணல் அப்துல்லா அல் நக்பி தெரிவித்துள்ளார்.
அவ்வேளையில் காரின் கியர் பார்க்கிங் மோடுக்கு (P) மாற்றப்பட்டிருக்கவில்லை. ஹேண்ட் பிறேக்கை பயன்படுத்தவுமில்லை எனவும் அவர் கூறினார்.
இதனால் கடற்கரையை கடந்து சென்று கடலுக்குள் கார் பாய்ந்ததாக அவர் கூறினார்.
எனினும் அப்பெண் காரிலிருந்து தப்பி வெளிவந்துள்ளார். அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
மேற்படி கார் அலைகளால் 30 மீற்றர் தூரம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.
இழுவை இயந்திரமொன்றைப் பயன்படுத்தி இக்கார் மீட்கப்பட்டது.
 கடற்கரைகள், சிற்றோடைகளுக்கு அருகில் வாகனம் செலுத்தும் போது சாரதிகள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என லெப். கேணல் அப்துல்லா அல் நக்பி வலியுறுத்தியுள்ளார்.