Ticker

6/recent/ticker-posts

இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்கும் கனிகா | Trincoinfo


திருமணத்திற்குப்பின் மீண்டும் நடிக்க வந்த நடிகைகளில் நடிகை கனிகாவுக்கு தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும்  கனிசமான அளவு பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.
ஆட்டோகிராப், எதிரி, வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை கனிகா மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர், தமிழில் தற்போது விஜய்சேதுபதி நாயகனாக நடித்துவரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகி நடித்துள்ளார். எனினும், மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கனிகா.
இந்தப் படத்தில் தனக்கான டப்பிங்கை தானே இலங்கை தமிழில் பேசியுள்ளார் கனிகா. இந்த தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதன்மூலம் இந்தப்படத்தில் இலங்கை தமிழ்ப்பெண் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.