• Breaking News

    கந்தளாயில் விபத்து ; ஒருவர் பலி, ஒருவர் காயம் | Trincoinfo


    திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் சேருவில  பகுதியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைச்சிளில் பயணித்த இருவரில் ஒருவர் பலியானதோடு மற்றவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இவ்விபத்துச் சம்பவம் இன்று(1)  மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
    விபத்தில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவரே பலியானதோடு கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மற்ற நபர் பலத்த காயங்களுடன் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

    இவ்விபத்துச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
    குறித்த இருவரும் கந்தளாய் சீனியாலை பகுதிக்குச் சென்று மாடுகளை மேய்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வேளை கந்தளாயிலிருந்து வான்எல பகுதியை நோக்கி பயணித்த வெள்ளை கார் மது ஒன்றில் போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் சென்றுள்ளதாகவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்த கார் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக ஆரம்ப கட்டவிசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

    காரின் சாரதியை கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.