• Breaking News

    எம்.எஸ். தோனி வேடத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை | Trincoinfo


    இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் தலைவர் எம்,எஸ், தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைர  தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில் தோனி வேடத்தில் நடித்தவர் இவர்,
    34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    2008 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்த சுஷாந்த் சிங் ராஜ்புட், 2013 ஆம் ஆண்டு வெளியான காய் போ சே திரைப்படத்தின் மூலம் பொலிவூட் நடிகராக அறிமுகமானார்.
    சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பொலிவூட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து பொலிஸார்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.