• Breaking News

    ராம் கோபால் வர்மா தயாரிப்பில் ‘கொரோனா வைரஸ்’ (வீடியோ இணைப்பு)

    தனது பேச்சுகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் தயாரிப்பில் ‘கொரோனா வைரஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள திரைப்படமொன்று உருவாகி வருகிறது. தெலுங்கில் உருவாகிவரும் இப்படத்தை அகஸ்திய மஞ்சு என்பவர் இயக்கியுள்ளார்.
    இந்நிலையில் அப்படத்தின் முன்னோட்டத்தை (ட்ரெய்லர்) அண்மையில் அவர் வெளியிட்டு பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார். இந்த ட்ரெய்லரை பார்த்து வியந்த பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டரில் பாராட்டியிருந்தார்.
    கொரோனா தாக்கம் காரணமாக குடும்பத்துக்குள் ஏற்படும் கருத்து மோதல்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.