• Breaking News

    ட்ரம்புக்கு எதிரான தகவல்கள் கொண்ட நூலை தடை செய்ய நீதிமன்றம் மறுப்பு


    அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோகர் ஜோல் போல்டன் எழுதிய நூலை தடை செய்வதற்கு அந்நாட்டு நீதிபதியொருவர் சற்றுமுன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
    அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்புக்கு எதிரான பரபரப்பான குற்றச்சாட்டுகள் இந்நூலில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கு சீன ஜனாதிபதி ஹீ ஜின்பிங்கின் உதவியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்; நாடினார் என மேற்படி நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி டரம்ப் கூறினார் எனவும் ஜோன் போல்டன் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
    The Room Where It Happened எனும் தலைப்பிலான 577 பக்கங்கள் கொண்ட புத்தகம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளிவரவுள்ளது. 
    இந்நூல் வெளியீட்டை  தடைசெய்யுமாறு அமெரிக்க நீதித்துறை திணைக்களம் மனுதாக்கல் செய்திருந்து.
    ஜோன் போல்டனின் நடவடடிக்கை தேசிய பாதுகாப்பு தொடர்பான பாரிய கரிசனைகளை ஏற்படுத்துகின்றபோதிலும் அந்நூலை தடை விதிப்பது பொருத்தமாகாது என நீதிபதி ரோய்ஸ் லம்பேர்ட் தெரிவித்துள்ளார்