Ticker

6/recent/ticker-posts

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான புதிய அறிவிப்பு!


சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த மார்ச் 13 முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக காலாவதியான திகதியிலிருந்து 6 மாதங்களுக்கு சலுகைக் காலமும், ஜுலை 1 ஆம் முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தினுள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக 3 மாத சலுகைக் காலமும் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு கிடைத்த பொதுமக்களின் புகார்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.