• Breaking News

    ஈராகின் புதிய பிரதமராக பதவியேற்ற முஸ்தபா அல் காதிமி விடுத்துள்ள அறிவிப்பு !


    ஈராக்கின் புதிய அரசாங்கம் கடந்த ஆண்டு ஒக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் போது கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை விடுப்பதாக உறுதியளித்துள்ளது.
    அத்துடன் அந்த அமைதியின்மையின்போது உயிரிழந்த 550 க்கும் மேற்பட்ட உறவினர்களுக்கான நீதியும் இழப்பீடும் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அந் நாட்டின் புதிய பிரதமர் முஸ்தபா அல் காதிமி தெரிவித்துள்ளார்.

    கடந்த வியாழக்கிழமை ஈராக்கின் புதிய பிரதமராக பதவியேற்ற முஸ்தபா அல் காதிமி, தனது முதல் அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பினை சனிக்கிழமை வெளியிட்டார்.
    குறித்த ஆர்ப்பாட்டத்தில் கொலைக் குற்றச்சாட்டுன் தொடர்புடையவர்களை தவிர அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
    ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து, அப்போதைய பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியதால், அரசு இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களால் சுமார் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.