• Breaking News

    பலாப்பழ ஜூஸ் செய்முறை | Trincoinfo




    Jackfruit juice வெளிநாட்டில் எல்லா இடங்களிலும் குடிக்கக் கிடைக்கும். எனக்குப் பிடித்த ஜூஸ்களில் இதுவும் ஒன்று.
    தேவையான பொருட்கள் :
    பலாப்பழச் சுளை - 10
    தேங்காய்ப் பால் - 1 கப்
    பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது (நட்ஸ் பொடி) - 1 ஸ்பூன்
    தேன் - சுவைக்கேற்ப (தேவைப்பட்டால்)
    செய்முறை :
    மிக்சியில் பலாப்பழத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
    அரைத்த ஜூஸில் நட்ஸ் பொடியையும், ஐஸ் கட்டிகளையும் சேர்த்துக் கலக்கவும்.
    இதை அப்படியே கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம்.
    தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்,
    முக்கியமாக பலாப்பழ ஜூஸ் குடிப்பவர்கள் ஏனைய குளிர்பானங்களான கொக்கக்கோலா, பெப்சி போன்ற கேஸ் பானங்களை பருகுவதை தவிர்க்கவும். இவை ஆரோக்கிய பானத்தை உடலுக்கு கேடான பானமாக மாற்றுவாதக ஒரு தகவல்.