• Breaking News

    கற்றாழை ஜூஸ் செய்முறை | Trincoinfo


    தேவையான பொருட்கள் :
    கற்றாழை ஜெல் - 100 கிராம்,
    எலுமிச்சம் பழம் - 1,
    தேன் - தேவையான அளவு,
    இஞ்சி, உப்பு - சிறிதளவு.
    செய்முறை :
    *கற்றாழையை தோல் நீக்கி அதன் ஜெல்லை எடுத்துக் கொள்ளவும்,
    *ஜெல்லை ஏழு முறை கழுவிக் கொள்ளவும், ஏனெனில் அதன் வாடையும், அதில் உடலுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும் சில வேதிப் பொருட்கள் நீங்கவுமே ஏழு முறை கழுவ வேண்டும்.
    * இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
    * எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
    * எலுமிச்சை சாறு, தேன், உப்பு, இஞ்சி இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
    * அடுத்து மிக்சியில் கற்றாழை ஜெல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.
    * அரைத்த கற்றாழை ஜூஸ், இஞ்சி சாறு இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து பருகவும். தேவையேற்படின் ஐஸ் சேர்க்கலாம்.
    * சூப்பரான இஞ்சி - கற்றாழை ஜூஸ் ரெடி.
    * தண்ணீருக்கு பதிலாக மோரையும் பயன்படுத்தலாம்.
    பலன்கள்: கற்றாழை, சரும நோயை சரிப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சியைத்தரும்.
    முக்கிய_குறிப்புகள்.
    யாரெல்லாம் கற்றாழை ஜூஸுக்கு `நோ' சொல்ல வேண்டும்?!
    * சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய்க்கான மருந்து சாப்பிட்டதும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. கற்றாழை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால் அவர்களுக்குச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துபோக வாய்ப்புள்ளது.
    * சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டாம். கற்றாழையும் ரத்தம் உறைதலைத் தடுக்கும் தன்மை கொண்டது என்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக ரத்தப்போக்கு உண்டாக வாய்ப்புள்ளது. எனவே, குடும்ப மருத்துவரை ஆலோசித்த பிறகே இவர்கள் கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டும்.
    * நாள்பட்ட நோய்களுக்கு ஆங்கில மருந்து எடுத்துக்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள், ஒவ்வாமை பிரச்னை உடையவர்கள் கற்றாழை ஜூஸ் அருந்த வேண்டாம்.
    Aloe JuiceAloe Juice
    மொத்தத்தில், ஒருவரின் ஆரோக்கிய உடல்நிலையைப் பொறுத்து 1 - 6 வாரங்கள் வரை கற்றாழை ஜூஸ் அருந்தலாம். பிறகு ஓரிரு மாதங்கள் இடைவெளிவிட்டு, மீண்டும் தொடரலாம். காலை நேர நடைப்பயிற்சியுடன் கசப்பு, புளிப்பு சேர்ந்து கடைசியில் நாவுக்குப் பிடித்த இனிப்புச் சுவையையும் தரும் கற்றாழை ஜூஸ், உடலுக்கு எல்லா நன்மைகளையும் செய்யும்; புத்துணர்வும் புதுப்பொலிவும் தரும்!