• Breaking News

    Driverகளை சுலபமாக install செய்ய...! | Trincoinfo


    புதிதாக கணினியை வாங்கியவுடன் அந்த கணினிக்கு தேவையான driverகள் அடங்கிய cd ஐ தருவார்கள். அதனை நம்மில் பெரும்பாலானோர் பராமரிப்பதில்லை அல்லது தொலைத்து விடுவார்கள். இதனால் நம் கணினிக்கு புதிதாக OS நிறுவ வேண்டிய நிலை வரும்போது தகுந்த Driver இல்லாமல் விழித்துக்கொண்டிருப்பார்கள்
    இதற்கு உதவுகிறது இந்த இலவச மென்பொருள்.(Driver Pack Solution)

    இதனை http://drp.su/download.htm என்ற தளத்தில் இலவசமாக download செய்து கொள்ளலாம்.

    பயன்படுத்தும் முறை:
    OS நிறுவப்பட்டவுடன் driver pack solution அடங்கிய DVD அல்லது Pen drive னை கணினியில் இணைத்து இயக்கினால் அதுவே நம் கணினிக்கு தேவையான Driver களை தேர்ந்தெடுத்து கணினியில் நிறுவிவிடும்.
    மேலும் கணினிக்கு தேவையான சில முக்கியமான மென்பொருட்களும் (Browsers, Players, etc ..,) இதனுடன் இணைந்து கிடைக்கிறது.