• Breaking News

    சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடி காலம் நீடிப்பு !


    ஏப்ரல் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடி காலத்தை கொரோனா வைரஸ் பரவல் நிலை முடிவுக்கு வரும் வரை நீடிக்க போக்குவரத்து அமைச்சு முடிவு  செய்துள்ளது.
    இது தொடர்பான ஆலோசனைகளை போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கியுள்ளார்.
    இன்றைய தினம் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
    கடந்த மார்ச் 10 ஆம் திகதிக்கு பின்னர், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை போக்குவரத்து திணைக்களம் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை நீடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
    இதேவளை எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் 2 வாரங்களுக்கு பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
    போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து நடாத்திய கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.