• Breaking News

    கிரிக்கெட் பயிற்சிக்காக டிஜிட்டல் அப்! : ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிமுகம்

    கிரிக்கெட் பயிற்றுநர்களின் அறிவுத்திறனை மேலும் விருத்தி செய்யும் பொருட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் டிஜிட்டல் கல்வித் திணைக்களமானது டிஜிட்டல் அப் மொடல் (Digital App model)  ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
    இந்த அப் (App)  பதிவிறக்கம் செய்யப்பட்டதும் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினி மூலம் பயிற்றுநர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்கு தேவையான அறிவுத்திறனை விருத்தி செய்தகொள்ளக்கூடியதாக இருக்கும்.
    கூக்ள் ப்ளே ஸ்டோர் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய இந்த அப் (செயலி) முறையை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் உயர்ஆற்றல் வெளிப்பாட்டு நிலையம், மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டு கழகங்கள், பாடசாலை கிரிக்கெட் ஆகியவற்றின் பயிற்நுறர்கள் பயன்படுத்த முடியும்.

    அத்துடன் தனியார் கிரிக்கெட் பயிற்சி நிலையங்களை நடாத்துபவர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சி ஆலோசகர் சான்றிதழை உடையவர்களும் இந்த டிஜிட்டல் கற்றல் செயலியை பயன்படுத்த முடியும்.
    ‘இந்தப் புதிய அப் (செயலி) ஆனது பயிற்றுநர்கள் தங்களது பணிகளை மேலும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள உதவும். கிரிக்கெட் பயிற்றுநர்கள் சமூகத்துக்கு இத்தகைய நுண்கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியமை மகிழ்ச்சி தருகின்றது’ என இந்த அப் குறித்து கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கிரிக்கெட் செயற்பாடுகள் பிரிவுத் தலைவர் ஜெரோம் ஜயரட்ன தெரிவித்தார்.