• Breaking News

    ஜப்பானில் ஒவ்வொருவருக்கும் 1.78 இலட்சம் ரூபா வழங்கப்படும்: ஜப்பானிய அரசு அறிவிப்பு


    ஜப்பானில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும தலா ஒரு இலட்சம் ஜப்பானிய யெண் (சுமார் ஒரு இலட்சத்து 78 ஆயிரம் இலங்கை ரூபா, 70,000 இந்திய ரூபா) வழங்குவதற்கு அந்நாட்டு அராங்கம் தீர்மானித்துள்ளது.
    கொரானோ எனும் கொவிட்-19 வைரஸ் பரவலினால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை தணிக்கும் வகையில் இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
    குறைந்த வருமானம் குறைந்தவர்களுக்கு மாத்திரம் தலா 3 இலட்சம் யெண் வழங்குவதற்கான திட்டத்தை ஜப்பானிய அரசாங்கம் முன்னர் முன்வைத்திருந்தது.
    ஆனால், இதனால் குறைந்த எண்ணிக்கையானோரே நன்மையடைவர் எனவும், இதை அமுல்படுத்துவது சிக்கலானது எனவும் அரசாங்கத் தரப்பினர் உட்பட பலரால் விமர்சிக்கப்பட்டது.
    இதையடுத்து வருமானத்தை கருத்திற்கொள்ளாமல் அனைவருக்கும் 100,000 ஜப்பானிய யெண் (930 அமெரிக்க டொலர்) வழங்கப்படும் என ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
    ஆதிக எண்ணிக்கையானோருக்கு நன்மையளிக்கும் திட்டமொன்று எமக்குத் தேவைப்பட்டது என ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார்.
    ஜப்பானில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நாடாளவிய ரீதியில் அவசரநிலை விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உதவித் தொகை குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
    ஜப்பானில் 9221 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 190 பேர் உயிரிழந்துள்ளனர். 935 பேர் குணமடைந்துள்ளனர்.