• Breaking News

    கண்ணா லட்டு தின்ன ஆசையா - நடிகர் சேது ராமன் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



    நடிகரும் மருத்துவருமான சேது ராமன் நேற்று இரவு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். சேது ராமன், நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோருடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து சந்தானத்துடன் வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


    இதேபோல் 50 50 என்ற படத்திலும் நடித்துள்ளார் சேதுராமன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார் சேதுராமன். தோல் மருத்துவத்தில் நிபுணரான சேதுராமன், சென்னை அண்ணாநகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.



    படங்களில் நடிப்பது போக தனது மருத்துவ தொழிலில் முழு நேரமாக சேவையாற்றி வந்தார் சேதுராமன். திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பிரபலங்கள் பலரும் அவரிடம் சிகிச்சை பெற்ற போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    திரைத்துறையில் பலருடனும் நல்ல நட்பு பாராட்டி வந்த சேதுராமனின் மறைவு திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. சேதுவின் மரணம் அவரது நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானத்தையும் உலுக்கியுள்ளது. அவரது மறைவு குறித்து திரைத்துறையினர் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.