• Breaking News

    திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை : ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபை


    இன்று காலை (28.03.2020) திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலய சிலை மற்றும் கலசங்கள் உடைந்து விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் மற்றும் தொலைபேசி மூலமாக பரவி வரும் செய்தி பொய்யானது எனவும்  வதந்திகளை பரப்ப வேண்டாமெனவும் திருக்கோணேஸ்வரர் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் க.அருள்சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
    இன்று (28) அதிகாலை காலை முதல் தொலைபேசி மூலம் பலர் அழைத்து கோயில் கலசம் மற்றும் சிலைகள் உடைந்து விழுந்து தொடர்பில் விசாரித்தனர்.
    திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் அவ்வாறு எந்த அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை, வதந்திகளைப் பரப்புவோர்  இவ்வாறான செயல்களை செய்ய வேண்டாம் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.
    மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் திருகோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு ஆலயத்திலும்  இடம்பெறவில்லை என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எமது செய்தியார்கள் ஆராய்ந்து அறிந்ததில் தெளிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.