• Breaking News

    எங்களை நாங்களே தனிமைப்படுத்துவது எப்படி ?


    நன்றி கார்டியன்
    தமிழில் வீரகேசரி இணையம்
    வீட்டில் இருங்கள்
    அது வெளிப்படையான விடயமாக தோன்றலாம்,நீங்கள் மருத்துவதேவையை தவிர வேறு காரணங்களிற்காக வீட்டைவிட்டு வெளியேறவேண்டியதில்லை.( முன்கூட்டியே அறிவித்த பின்னர் மருத்துவரை நாடுங்கள்). விருந்தினர்களுக்கு   வரவேண்டாம் என தெரிவியுங்கள்.நண்பர்கள் உறவினர்களை இணையம் -தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளுங்கள்.
    ஓன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்பவர் என்றால் பொருட்களை வீட்டின் முன்னாள் வைத்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.
    நபர் ஒருவரிடமிருந்து  பொருட்களை பெறவேண்டாம்.
    உங்கள் குடும்ப உறுப்பினர்களிற்கும் இதே வேண்டுகோளை முன்வையுங்கள்

    2
    ஏனையவர்களிடமிருந்து உங்களை தனிமைப்படுத்துங்கள்
    மூடப்பட்ட அறையில்- தனியறையில் உங்களை தனிமைப்படுத்துங்கள்,அந்த அறை திறப்பதற்கான ஜன்னலை கொண்டுள்ளதாக காணப்படவேண்டும், நீங்கள் பயன்படுத்தும் எந்த பொருளையும் வீட்டில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம்.அது சாத்தியமில்லை என்றால் கையால் கழுவி தனியொரு துணியினால் துடையுங்கள்.
    சலவைக்கான பொருட்கள் படுக்கை விரிப்புகள் போன்றவறை தனியானதொரு பொலித்தீன் பையினுள் வைக்கவும்.
    வைரஸ் இல்லை என்பது உறுதியான பின்னர் அல்லது தனிமைப்படுத்தல் முடிந்த பின்னர் மாத்திரமே அவற்றை கழுவவேண்டும்.
    உணவும் கழிவறைகளும்
    உங்கள் அறைக்கு வெளியே வைக்கப்பட்ட உணவினையே உண்ணுங்கள்.
    உங்களின் உணவை நீங்கள் சமைப்பவர் என்றால் ஏனையவர்கள் சமையலறையில் இல்லாத தருணத்தில் சமையலில் ஈடுபடுங்கள்.
    வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கழிவறையிருந்தால் உங்களுக்கு என ஒரு கழிவறையை மாத்திரம் பயன்படுத்துங்கள்.
    பொதுவான கழிவறையை  பயன்படுத்தவேண்டும் என்றால் அதனை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
    பகிரப்பட்ட ஒரு பகுதியில் வசிக்கின்றீர்கள் என்றால் அவசியமான சந்தர்ப்பத்தில் மாத்திரம் வெளியில் செல்லுங்கள் . முகக்கவசம் அணிந்தாவறு செல்லுங்கள்.
    ஏனையவர்கள் காணப்படும் சந்தர்ப்பங்களில்  சமையலறைகள் கழிவறைகளை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    4
    செல்லப்பிராணிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்
    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றிற்கு அருகில் செல்வதற்கு முன்னரும் பின்னரும் கைகளை கழுவுங்கள்
    5
    நீங்கள் இருமல் அல்லது தும்மலின் போது பயன்படுத்தி டிசுக்ககளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்
    அவற்றை பிளாஸ்டிக் பையினுள் போட்ட பின்னர் உடனடியாக கைகளை சோப்பினை பயன்படுத்தி கழுவுங்கள்.
    ஏனையவர்களுடன் அறையில் இருக்கும்போது முகக்கவசத்தை அணிந்துகொள்ளுங்கள்.
    கழுவாத கைகளினால் உங்கள் முகம் கண் வாய் போன்றவற்றை  தொடவேண்டாம்.
    கை கழுவுதல் 

    அனைத்து மக்களிற்கும் இந்த விதிமுறைகள் பொதுவானவை.-சோப்பையும் தண்ணீரையும் பயன்படுத்தி 20 செகன்ட்களிற்கு  கையை நன்றாக கழுவுங்கள். பின்னர் நன்றாக துடைத்து உலரச்செய்யுங்கள்
    கழுவதா கைகள் மூலம் உங்கள் முகம் கை வாய் போன்றவற்றை தொடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    கழிவுப்பொருட்களை அகற்றுதல்
    நீங்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் கழிவுப்பொருட்களையும் பிளாஸ்டிக் பையினுள் போட்டு அப்புறப்படுத்துங்கள்.அதனை நன்றாக இருக்கி கட்டுங்கள்.
    அதனை பின்னர் மற்றொரு பையினுள் போட்டு கட்டவேண்டும்.
    உங்களின் மருத்துபரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரைக்கு அவற்றை அப்புறப்படுத்தவேண்டாம்.
    உங்களிற்கு நோய் தொற்று உறுதியானால் அவற்றை எப்படி அப்புறப்படுத்துவது என்ற அறிவுரை வழங்கப்படும்.